About Us

கலாபாரதி கல்விச் சேனல்
(www.youtube.com/c/kalabharathiacademy)

2017ஆம் ஆண்டு கலாபாரதி கல்விச் சேனல் துவங்கப்பட்டது. கல்வியில் பெரும் ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற விரிவுரையாளர் திரு க. யோகராஜன், M.E., மேலும் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் R. ஜெயபால் B.V.Sc., ஆகிய இருவர்களால் இச்சேனல் தோற்றுவிக்கப்பட்டது. பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கான பாடங்கள் இதில் பதிவேற்றம் செய்யப் படுகின்றன. ஆரம்பித்த சில மாதங்களில் மாணவர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை இந்தச் சேனல் பெற்றுள்ளது. அதற்கான முக்கிய காரணங்களில் சில...

முக்கிய காரணங்களில் சில...
  • தினமும் குறைந்தது 10 காணொளிகள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன.
  • இதுவரை 4500 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • மாணவர்கள் என்ன கேட்கின்றனரோ அதற்கு முன்னுரிமை கொடுத்து காணொளிகள் வெளியிடப்படுகின்றன.
  • சர்வ தேச தரத்தில் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன.
  • youtube பில் வெளியிடப் படுவதால் முற்றிலும் இலவசம்.
  • கடினம் எனக்கருதப்படும் இயற்பியல், உயிரியல், கணிதம் மேலும் வேதியியல் பாடங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
  • புதிய பாடத்திட்டத்திற்கான பாடங்கள் வரிசைப் படி வெளியிடப்படுகின்றன.
  • மிகச் சிறப்பான அம்சம் என்னவெனில் புத்தகத்தில் என்ன வரிசையில் பாடங்கள் உள்ளனவோ அதே வரிசையில் பாடங்கள் (Playlist ) நமது சேனலில் அடுக்கப் பட்டிருக்கின்றன. எனவே மாணவர்கள் சுலபமாக தங்களுக்குத் தேவையான பாடங்களை சில நொடிகளில் கண்டு பிடிக்க இயலும்.
  • படிப்பதை எளிமையாக்கும் பொருட்டு வெப்சைட் ஒன்றும் இணைக்கப் பட்டிருக்கிறது www.Kalabharathiacademy.com
  • மாணவர்கள் சந்தேகம் கேட்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் 24 நான்கு மணி நேரத்தில் தீர்க்கப் படுகின்றன.
  • கோட்பாடுகளுக்கும் பயிற்சிக் கணிதங்களுக்கும் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவது மற்றொரு முக்கிய அம்சம். எனவே நம் மாணவர்களால் வாரியத் தேர்வு மட்டுமல்ல, நீட் போன்ற போட்டித் தேர்வுகளையும் லகுவாக வெற்றி கொள்ள முடியும்.
  • குறிப்பாக ஆசிரியர்களின் தயாரிப்பு நேரமும் சுமையும் குறையும். பாடம் நடத்துதல் எளிதாகும்
    இக்காரணங்களினால் கலாபாரதி கல்விச் சேனல் தமிழகத்தின் மிகப் பெரும் கல்விச்சேனலாக உருவெடுத்துள்ளது.
    பதிவேற்றம் செய்த காணொளிகள் - 4500 Subscribers - 36300 23 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பயன்படுத்திய காலம் 61 லட்சம் நிமிடங்கள்.
  • தமிழகத்தின் மிகப் பெரும் கல்விகருவூலத்தை கலாபாரதி மிகக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளது. மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்க வேண்டும் என்பதே கலாபாரதியின் நோக்கம். கல்வியின் மேல் உள்ள பயம் அகல வேண்டும். அனைத்துக் கிராமப்புற மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு உருவாக்கப் படவேண்டும். நீட் போன்ற போட்டித் தேர்வுகள் நம் மாணவர்களுக்கு பெரும் சவால்களாக தற்போது இருக்கின்றன. அந்த சவாலை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கலாபாரதி மிக மிக பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார வாய்ப்பிருந்தால் மட்டுமே உயர்ந்த தரத்தில் கற்று போட்டி தேர்வுகளை வெற்றிபெறலாம் எனும் சூழல் இனி இதன்மூலம் மாறும்.
  • சிறந்த கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் உள்ள வழிகாட்டும் குழு இந்த சேனலை வழி நடத்துகின்றது. இதன் பொறுப்பாளர் திரு நந்தகுமரன்(9986815152) ஆவார். பள்ளிகளில் கலாபாரதி சேனலை பயன்படுத்த விரும்பும் நிர்வாகிகளுக்கு தொழில் நுட்ப வழிகாட்டியாக விளங்குகிறார்.
  • மக்களின் மிகப் பெரும் நம்பிக்கையை பெற்றுள்ள நாளிதழ் இந்து என்பது அனைவரும் அறிந்ததே... நம் சேனல் குறித்த விழிப்புணர்வினை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் உருவாக்குங்கள் என கலாபாரதி குழுமம் மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
    வாழ்த்துகள் கோடி...!
    மிக்க அன்புடன்,
    க. யோகராஜன், நிறுவுனர் -தலைவர்,
    டாக்டர் R . ஜெயபால், நிறுவுனர் - உப தலைவர்,
    கலாபாரதி கல்விச் சேனல்

Our Team
content here
name
position
content here
name
position
content here
name
position